புத்தாண்டு: மஹாகாலேஷ்வர் கோயிலுக்கு 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு! 

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜையினில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலுக்கு புத்தாண்டு வழிபாட்டுக்குக் குறைந்தது 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
புத்தாண்டு: மஹாகாலேஷ்வர் கோயிலுக்கு 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு! 

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜையினில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலுக்கு புத்தாண்டு வழிபாட்டுக்கு குறைந்தது 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான க்ஷிப்ரா நதிக்கு அருகில் அமைந்துள்ள மஹாகாலேஷ்வர் கோயிலில் வருடத்தின் முதல் நாளை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருவதுண்டு. இந்நிலையில், இந்தாண்டு புத்தாண்டு  ஞாயிற்றுக்கிழமையில் வந்துள்ளதால், வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கோயிலுக்கு வரும் பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கோயிலைச் சுற்றித் தடுப்புகள் போடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஆறு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அவசரநிலையைச் சமாளிக்க மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடலை மாவினால் ஆன லட்டு பிரசாதம் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. 

கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும். காலை 6 மணி வரை பஸ்ம ஆரத்தி நடைபெறும். இரவு 10 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். வழிபாட்டுடன் இரவு 11 மணிக்கு மூடப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com