2022-ல் மோடி அளித்த வாக்குறுதிகள்! கேலி செய்த பிரஷாந்த் பூஷண்

கனவு காண்பதிலும், உறுதியளிப்பதிலும் பிரதமர் நரேந்திர மோடியை குற்றம் சொல்ல முடியாது என மூத்த வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண் கேலியாக விமர்சித்துள்ளார்.  
நரேந்திர மோடி, அவர் அளித்த வாக்குறுதிகள்
நரேந்திர மோடி, அவர் அளித்த வாக்குறுதிகள்

கனவு காண்பதிலும், உறுதியளிப்பதிலும் பிரதமர் நரேந்திர மோடியை குற்றம் சொல்ல முடியாது என மூத்த வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண் கேலியாக விமர்சித்துள்ளார்.  

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், பல்வேறு நிகழ்வுகளில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகள் இடம் பெற்ற செய்திகளின் தலைப்புகளைப் படங்களாக சேகரித்துப் பதிவிட்டுள்ளார். 

பல்வேறு ஆங்கில செய்தி நிறுவனங்களின் செய்திகளைப் பகிர்ந்துள்ள பிரஷாந்த் பூஷணின் பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. 

2022-ல் மோடி அளித்த வாக்குறுதிகள்

அதில், 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் இரட்டிப்பாகி 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், 2022ஆம் ஆண்டுக்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமாக வீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும்.

2022-ல் இந்தியாவில் ஒவ்வொரு வீடும் 24 மணிநேர தடையற்ற மின்சாரம் பெற வழிவகை செய்யப்படும்.

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

2022-ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்பன போன்ற நரேந்திர மோடியின் வாக்குறுதிகளின் தலைப்பு செய்திகள் இடம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com