மகாராஷ்டிரத்தில் புதிதாக 14 ஆயிரம் பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை உயர்வு

மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,372 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,372 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. திங்கள்கிழமை 15 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 14,372 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், திங்கள்கிழமை 39 பேர் மட்டுமே நோய்த் தொற்றுக்கு பலியான நிலையில், செவ்வாய்க்கிழமை 94 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 77,35,481 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 1,42,705 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக யாருக்கும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இதன்மூலம், ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,221 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 73,97,352 பேர் குணமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகப் பதிவானதால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்து 1,91,524 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com