
மின்சார வாகனங்களில் சார்ஜ் போடுவதற்கு அதிக நேரம் காத்து நிற்பதற்கு பதிலாக புதிய திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் கூறிய முக்கிய அம்சங்கள்:
மின்சார வாகனங்களில் சார்ஜ் போடுவதற்கு பதிலாக பேட்டரியை மாற்றிக் கொள்ளும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதற்காக பேட்டரி மாற்றும் மையங்கள் உருவாக்கப்படும். அந்த மையங்களில் தங்களின் பேட்டரியை கொடுத்துவிட்டு வேறு பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.