கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நதிநீரால் பயனடையும் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னர் இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் அவர் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த நிதிநிலைஅறிக்கையில் உறுதியளித்துள்ளார்.
தமங்கங்கா-பிஞ்சால், பர்-தபி-நர்மதை, கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணாறு, பெண்ணாறு-காவிரி ஆகிய நதிநீர் இணைப்புத் திட்டங்களின் நிலை குறித்து நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அதனிபடி, முதல்கட்ட விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) மத்திய ஜல் சக்தித் துறையின் கீழ் உள்ள தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் (என்.டபிள்யூ.டி.ஏ.) கடந்த 2019 -இல் தயாரித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்துகளுக்காக அனுப்பியது.
சுமார் ரூ.60 ஆயிரம் கோடி செலவிலான இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 200 முதல் 300 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் நிலையில், இந்தத் திட்டத்துக்கான டிபிஆருக்கு உடனடியாக அனுமதி வழங்கக் கோரி தமிழக அரசு சார்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தயார் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின்

சகோதரர் ராகுல் விரைவில் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பார்: முதல்வர் ஸ்டாலின்

காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று இறுதி? ராகுல் ஆலோசனை!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

