யுஜிசி தலைவராக ஜெகதேஷ் குமார் நியமனம்

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் துணைவேந்தர் எம்.ஜெகதேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புது தில்லி: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் துணைவேந்தர் எம்.ஜெகதேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஜெகதேஷ் குமாரின் பதவிக்காலம் பாதிக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் செயல் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த நிலையில், அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது.

இந்நிலையில், "பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய தலைவராக ஜெகதேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்." இதனை மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

2018 இல் யுஜிசி தலைவராக பொறுப்பேற்ற பேராசிரியர் டி.பி.சிங், 65 ஆவது வயதில் ராஜிநாமா செய்ததை அடுத்து, டிசம்பர் 7 ஆம் தேதி முதல் யுஜிசி தலைவர் பதவி காலியாக இருந்தது. 

தற்போது வரை உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணைய துணைத் தலைவர் பதவியும் காலியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com