புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதுவையில் 500-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

புதுவையில் தினசரி கரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் குறைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :4 பிப்ரவரி 2022, 7:55 am

DIN

புதுவையில் தினசரி கரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் குறைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதார இயக்குநர் ஜி ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள தகவலில், 

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 431 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து யூனியன் பிரதேசத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,63,563 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் ஒரேநாளில் 2,686 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 431 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 

புதுச்சேரி(279), காரைக்கால்(109), யானம்(34) மற்றும் மாஹே(9) ஆகிய இடங்களில் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. 

நோய்த் தொற்றுக்கு மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 1,946 ஆக உள்ளது. 

தற்போது தொற்று பாதிப்பு 5,458 பேரில், 115 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5,343 பேர் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 1,608 பேர் நோயிலிருந்து மீண்டு மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர், ஒட்டுமொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,159 ஆக உள்ளது.

புதுவையில் இதுவரை 21,71,924 மாதிரிகள் பரிசோதித்துள்ளதாகவும், அவற்றில் 18,19,675 மாதிரிகள் எதிர்மறையானவை என்றும் அவர் கூறினார். மாநிலத்தில் மொத்தம் 15,40,256 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.