கோரக்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோரக்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது, அமித் ஷா அவருடன் சென்றிருந்தார்.
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.  இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

பாஜக சார்பில், கட்சியின் தேசியத் தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அங்கு தொடர்ந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோரக்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது, அமித் ஷா அவருடன் சென்றிருந்தார்.

முன்னதாக கோரக்பூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்தை பாராட்டி பேசினார். விரிவாக பேசிய அவர், "யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தை மாஃபியாக்களிடம் இருந்து விடுவித்துள்ளார் என்பதை நான் பெருமையுடன் கூற முடியும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் சட்டத்தின் ஆட்சியை நிறுவினார். 

பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு இலவச கரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளார். மேலும் அதிகபட்ச தடுப்பூசிகளை செலுத்தி கொண்ட மாநிலம் உங்கள் சொந்த உத்தரபிரதேசத்தைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். யோகியின் தலைமையின் கீழ் இது நடைபெற்றுள்ளது" என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவித்த முதல் கட்சி பாஜக என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com