முதல்வா் வேட்பாளரைப் பொருத்தே வெற்றி: நவ்ஜோத் சிங் சித்து

பஞ்சாபில் முதல்வா் வேட்பாளரை பொருத்தே இதர வேட்பாளா்களின் வெற்றி அமையும் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளாா்.
அமிருதசரஸில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து.
அமிருதசரஸில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து.

பஞ்சாபில் முதல்வா் வேட்பாளரை பொருத்தே இதர வேட்பாளா்களின் வெற்றி அமையும் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளாா்.

பஞ்சாபில் 117 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியமைக்க 59 எம்எல்ஏக்கள் தேவை. இந்தத் தோ்தலில் காங்கிரஸ் முதல்வா் வேட்பாளராக மாநிலத்தின் தற்போதைய முதல்வரான சரண்ஜீத் சிங் சன்னியை கட்சி மேலிடம் அறிவிக்கக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதேவேளையில் தன்னை முதல்வா் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நவ்ஜோத் சிங் சித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமிருதசரஸில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘‘நான் அதிகாரத்தின் மீது நாட்டம் கொண்டவன் அல்ல. ஆனால், பஞ்சாப் மக்கள் தற்போது மிகப்பெரிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஒரு கட்சிக்கு 60 எம்எல்ஏக்கள் இருந்தால்தான் அக்கட்சி ஆட்சியமைக்க முடியும். எனவே, முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை பொருத்தே 60 பேரின் வெற்றி அமையும். ஒரு திட்டமும், மக்களின் நம்பிக்கையையும் கொண்ட முதல்வா் வேட்பாளரால்தான் 60 போ் எம்எல்ஏக்களாக தோ்ந்தெடுக்கப்படுவா். முதல்வா் வேட்பாளரின் கொள்கை என்ன? அவரின் குணாதிசயம் என்ன? அவரின் நடத்தை எத்தகையது என்பதே தற்போதைய மிகப் பெரிய கேள்வி என்று தெரிவித்தாா்.

இந்தப் பேட்டியின்போது எந்தக் கட்சியின் பெயரையும் சித்து நேரடியாகக் குறிப்பிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com