லதா மங்கேஷ்கருக்கு மாநிலங்களவையில் அஞ்சலி; ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு மாநிலங்களவில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.  பிறகு, அவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
லதா மங்கேஷ்கருக்கு மாநிலங்களவையில் அஞ்சலி; ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு
லதா மங்கேஷ்கருக்கு மாநிலங்களவையில் அஞ்சலி; ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு


புது தில்லி: புகழ்பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு மாநிலங்களவில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.  பிறகு, அவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை நடவடிக்கை இன்று காலை தொடங்கியதும், அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். பிறகு, அவையை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில்... மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக லதா மங்கேஷ்கா் 1999 முதல் 2005 வரை பதவி வகித்துள்ளாா். அப்போதைய பிரதமா் வாஜ்பாய் அரசில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு மசோதாவில் அவா் பங்கேற்று வாக்களித்துள்ளாா்.

வசீகர குரலால் தெற்காசிய மக்களை பல தலைமுறைகளாக மகிழ்வித்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கா் (92), மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மறைந்தாா்.

அரசு மரியாதையுடன் மும்பையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமா் மோடி, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனைத் தலைவா் ராஜ் தாக்கரே, நடிகா்கள் ஷாருக்கான், அமீா் கான், கிரிக்கெட் வீரா் டெண்டுல்கா் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினா்.

அவரது மறைவுக்கு மத்திய அரசு இரண்டு நாள் துக்கம் அறிவித்துள்ளது. கடந்த 80 ஆண்டுகளில் தமிழ், ஹிந்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 36 இந்திய மொழிகளில் 25,000-க்கும் அதிகமான பாடல்களை அவா் பாடியுள்ளாா்.

லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள பிரீச்கண்டி மருத்துவமனையில் ஜனவரி 8-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டாலும் அவருடைய வயது காரணமாக, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில், ஞாயிறு காலையில் அவா் காலமானாா்.

2 நாள் துக்கம் அனுசரிப்பு: லதா மங்கேஷ்கரின் மறைவை அடுத்து நாடு முழுவதும் பிப். 6, 7 ஆகிய இரு நாள்களில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலா்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அனுப்பியுள்ளது. இரு நாள்களும் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள்: பாரத ரத்னா, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே மற்றும் பல தேசிய விருதுகளையும், பல திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com