உ.பி.யில் 1,878 ஆமைகள் பறிமுதல்: இருவர் கைது

உத்தரப் பிரதேசத்தின், கான்பூரில் சக்கேசி பகுதியில் கிட்டத்தட்ட 1,878 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
உ.பி.யில் 1,878 ஆமைகள் பறிமுதல்: இருவர் கைது
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தின், கான்பூரில் சக்கேசி பகுதியில் கிட்டத்தட்ட 1,878 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சக்கேசி பகுதியில் சன் மைகா சரக்குகளுடன், ஒரு சாக்கு மூட்டையில் ஆமைகள் அடைத்து வைக்கப்பட்டு, அவற்றை மேற்கு வங்காளத்திற்குக் கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தனர். 

இதுகுறித்து செய்தி தொடர்பாளர் கூறுகையில், 

கைது செய்யப்பட்ட இருவரும் ஜம்மு-காஷ்மீரின் கதுவா பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஜாவேத் மற்றும் பரூக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இருவரும் லாரி ஓட்டுனர்கள் என்றும், ராஜஸ்தானிலிருந்து சன் மைகா சரக்குகளுடன் மேற்கு வங்கம் நோக்கிச் சென்றதாகவும் ஒப்புக்கொண்டனர். பயணத்தின் இடையில், எட்டாவாவின் பிரபல கடத்தல்காரனான கபூர் அவர்களைத் தொடர்புகொண்டு ஆமைகளின் மூட்டைகளை கொண்டுசெல்லும்படி கூறியுள்ளார். 

பணத்திற்குப் பதிலாக கடல்வாழ் உயிரினங்களைக் கடத்துகின்றனர். அழியும் நிலையில் உள்ள ஆமைகளைக் கடத்துவது வனவிலங்கு ஏஜென்சிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

கைது செய்யப்பட்ட 2 பேர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com