
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜனவரி 31-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினாா். அவரது உரை மீதான விவாதம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அந்த விவாதத்தின் மீது நேற்று மக்களவையில் உரையாற்றிய மோடி, தற்போது மாநிலங்களவையிலும் பேசி வருகிறார்.
மாநிலங்களவையில் அவர் பேசிய உரையில்,
நம் நாட்டு மக்கள் கரோனா பிரச்னையை திறம்பட எதிர்கொண்டுள்ளனர்.
சில தலைவர்கள் தங்கள் தொகுதியைக் கூட கவனிப்பதில்லை என ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி சாடியுள்ளார்.
எதிர்க்கட்சியான பிறகு நாட்டை பற்றிக் கவலைப்பட வேண்டாம் என சிலர் செயல்படுகின்றனர்.
ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் நமது நாட்டை தரம் தாழ்த்தி விமர்சிக்கக் கூடாது என ராகுல்காந்தி குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.