உ.பி. தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.03% வாக்குகள் பதிவு

உ.பி. தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.03% வாக்குகள் பதிவு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
Published on

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட  உத்தரப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று (வியாழக்கிழமை)  காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

முதல் கட்டத் தோ்தல், மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாம்லி, ஹாபூா், கௌதம்புத்தா நகா், முசாஃபா்நகா், மீரட், காஜியாபாத், புலந்த்சாஹா், அலிகா், மதுரா, ஆக்ரா, பாக்பத் ஆகிய 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 தொகுதிகளில் 10,766 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வருகிறது. 

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், காலை 11 மணி நிலவரப்படி 20.03 சதவிகித வாக்குகள் பதிவானது. தொடர்ந்து பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 35.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இதில், அதிகபட்சமாக ஷாம்லி தொகுதியில் 41.16% வாக்குகளும், ஹாபூா் தொகுதியில் 39.97% வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

இன்று முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக உத்தரப் பிரதேச தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com