பொதுமக்கள் பார்வைக்கு முகலாயத் தோட்டம் நாளை(பிப்.12) திறப்பு: ஆன்லைனில் முன்பதிவு

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகலாயத் தோட்டம் சனிக்கிழமை (பிப்.12) முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகலாயத் தோட்டம்
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகலாயத் தோட்டம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகலாயத் தோட்டம் சனிக்கிழமை (பிப்.12) முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் மாளிகையின் வருடாந்திர திருவிழாவையொட்டி, மாளிகையில் உள்ள புகழ்பெற்ற முகலாயத் தோட்டத்தை பொதுமக்களின் பார்வைக்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை திறந்துவைத்து மனைவி சவிதாவுடன் தோட்டத்தை பார்வையிட்டார். 

குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தோட்டத்தை பார்வையிடும் நேரம் உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இத்தோட்டத்தை பார்வையிடலாம் என்றும் திங்கள்கிழமைகளில் மட்டும் தோட்ட பராமரிப்பு நடைபெறுவதனால் அன்று பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தோட்டத்தை பார்வையிட விரும்புவோர் https://rashtrapatisachivalaya.gov.in அல்லது https://rb.nic.in/rbvisit/visit_plan.aspx என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். கரோனா பரவல் காரணமாக நேரடியாக வந்து டிக்கெட் பெறும் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

காலை 10 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழு என மாலை 4 மணி வரை உள்ளே அனுப்பப்படுவார்கள். நார்த் அவென்யுவில் உள்ள நுழைவு வாயில் எண்-35 வழியாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கரோனா விதிமுறைகளை பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தோட்டத்துக்கு வரும் பார்வையாளர்கள், குடிநீர் கேன்கள், சூட்கேஸ்கள், கைப்பைகள், கேமராக்கள், ரேடியோக்கள், டிரான்சிஸ்டர்கள், பெட்டிகள், குடைகள் மற்றும் திண்பண்டங்கள் கொண்டுவருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு கொண்டு வந்தால், அதை நுழைவு வாயிலிலேயே ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com