சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச விமானக் கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் கண்கவர் சாகச நிகழ்வை செவ்வாய்க்கிழமை நடத்தியது.
சிங்கப்பூரில் சா்வதேச விமான கண்காட்சி இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சா்வதேச விமான தொழில் துறை இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்த இந்த விமானக் கண்காட்சி வழிவகுத்துள்ளது.
பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ள இந்தக் கண்காட்சியில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக ‘தேஜஸ் எம்கே-ஐ’ போா் விமானத்தை இந்திய விமானப் படை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த விமானக் கண்காட்சியில் பங்கேற்க 44 பேரைக் கொண்ட இந்திய விமானப் படையினா் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
இந்நிலையில், முதல் நாள் நிகழ்வான இன்று இந்திய விமானப் படையினர் தேஜஸ் விமானத்தை இயக்கி அனைவருக்கும் காட்சிப்படுத்தினர்.
இத்துடன் ராயல் சிங்கப்பூா் விமானப் படை மற்றும் பிற நாடுகளின் பிரதிநிதிகளுடன் இந்திய விமானப் படையினா் உரையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.