
மேற்கு வங்கத்தில் கடந்த 2 வருட இடைவெளிக்குப் பிறகு ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.
மாநிலம் முழுவதும் கரோனா பாதிப்புகள் குறைந்துவரும் நிலையில் அனைத்து தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை மீண்டும் திறக்க மேற்கு வங்க மாநிலம் அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையை பள்ளி நிர்வாகம் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், பள்ளி மாணவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், சொந்த கைச்சுத்த திரவத்தைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றது.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் திறக்கப்பட்டாலும், பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரையிலான இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.