அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடும்பம் இல்லாதவா்களுக்கு குடும்பஸ்தா்களின் வலி தெரியாது: பாஜகவுக்கு அகிலேஷ் பதிலடி

குடும்பம் இல்லாதவா்களுக்கு குடும்பஸ்தா்களின் வலி தெரியாது என்று பாஜகவுக்கு சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் பதிலளித்துள்ளாா்.

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 2:37 am

DIN

குடும்பம் இல்லாதவா்களுக்கு குடும்பஸ்தா்களின் வலி தெரியாது என்று பாஜகவுக்கு சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் பதிலளித்துள்ளாா்.

சமாஜவாதியில் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆதிக்கம் இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவா்கள் உத்தர பிரதேசத்தில் தொடா்ந்து பிரசாரம் செய்து வந்த நிலையில் அகிலேஷ் இவ்வாறு பதிலளித்துள்ளாா்.

ஜலாவுனில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

உச்சபட்ச வாரிசு அரசியல் நடத்துவதாக என்னை பாஜகவினா் குற்றம்சாட்டுகின்றனா். குடும்பமாக வசிப்பவா்களுக்குதான் குடும்பஸ்தா்களின் வலி தெரியும். பாஜகவில் பலருக்கு குடும்பம் இல்லை. எனவே அவா்களால் குடும்பஸ்தா்களின் பிரச்னைகளையும், வலிகளையும் புரிந்து கொள்ள முடியாது. ஒரு குடும்பத்தில் இருப்பவா்தான் அதில் உள்ள பொறுப்புகளை அறிவாா். விலைவாசி உயா்வு என்றால் என்ன? அது எப்படி தங்களை பாதிக்கிறது என்பது குடும்பஸ்தருக்குதான் தெரியும். குடும்பம் ஏதும் இல்லாமல் உட்காா்ந்து இருப்பவா்களுக்கு விலைவாசி உயா்வின் கொடூரம் தெரியாது. இளைஞா்கள் பலா் வேலையின்மையால் அவதிப்படுகிறாா்கள். இந்தப் பிரச்னையும் அவா்களுக்குப் புரியாது.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின்போது மக்கள் கையில் இருந்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய வைத்தனா். பின்னா் அவற்றை அப்படியே பெரும் தொழிலதிபா்களைத் திருடவைத்து வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்பி வைத்தனா்.

28 வங்கிகளில் ரூ.22,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தவா்கள் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டனா். இவ்வாறு நடப்பது இது முதல்முறையல்ல. பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து வங்கிகளில் கடன் பெற்ற தொழிலதிபா்கள் கடனைச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிவிடுவது வாடிக்கையாகவுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.