உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல்: 6 பேர் கைது

உத்தரப் பிரதேசத்தின் சந்தௌலியில் சட்ட விரோதமாக ஆயுதம் தயாரிக்கும் பிரிவை காவல்துறையினார் கண்டுபிடித்துள்ளனர். 
உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல்: 6 பேர் கைது

உத்தரப் பிரதேசத்தின் சந்தௌலியில் சட்ட விரோதமாக ஆயுதம் தயாரிக்கும் பிரிவை காவல்துறையினார் கண்டுபிடித்துள்ளனர். 

சந்தோலியில், முகல்சராய் காவல்துறையினர் குண்டகுர்த் கிராமத்திற்கு அருகே கங்கை நதிக்கரையில் ஒரு குடிசையை சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோத ஆயுத தயாரிப்பு பிரிவைக் கண்டுபிடித்தனர். 

குடிசையைச் சோதனை செய்ததில், நான்கு நாட்டுத் துப்பாக்கிகள், பல ரிவால்வர்கள், ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் கருவிகள் மீட்கப்பட்டன.

மருப்பூர் பலுவா பகுதியைச் சேர்ந்த சஞ்சய் சர்மா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக வட்ட அதிகாரி சதர் அனில் ராய் தெரிவித்தார்.

விசாரணையில், ஷர்மா நீண்ட காலமாக சட்டவிரோத ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் சோதனைகள் தீவிரப்படுத்தினர். 

அப்போது, காவல்துறையினரை கண்டதும், காரில் இருந்தவர்கள் குதித்து தப்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டதோடு, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

காரை சோதனை செய்ததில், ஒரு கைத்துப்பாக்கி, 40 தோட்டாக்கள், ரூ.26,100 மதிப்புள்ள பணம் மற்றும் 7 மொபைல் போன்கள் மீட்கப்பட்டதாக எஸ்பி அசம்கர் அனுராக் ஆர்யா தெரிவித்தார்.

இதுதொடர்பாக விவேக் சிங், அபிஷேக் தீட்சித், பங்கஜ் சிங், சந்தீப் சிங், கோபி மவுரியா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கந்த்வாவில் இருந்து ஆயுதங்களை வாங்கியதாக ஒப்புக்கொண்டதாக ஆர்யா கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com