
கரோனா தடுப்பூசியான கோவோவேக்ஸை 12 வயது முதல் 17 வயதுடையவா்களுக்கும் அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கக் கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
எனினும், 15 வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு இதுரை முடிவு செய்யவில்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடரபாக சீரம் நிறுவனம் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில், ‘12 வயது முதல் 17 வயது வரையிலான 2,707 பேரிடம் கோவோவேக்ஸ குறித்து இரண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் இந்த தடுப்பூசி பாதுகாப்பானதும், எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இதை 12 வயதுக்குள்பட்டவா்களுக்கு செலுத்த அனுமதி அளிக்க வேண்டும். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே பயன் அளிக்கும். இந்தியாவுக்கு பெருமை சோ்க்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மருத்துவ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நோவோவேக்ஸ் தடுப்பூசியின் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதுதான் கோவோவேக்ஸ் தடுப்பூசியாகும்.
கோவோவேக்ஸ் தடுப்பூசியை பெரியவா்களின் அவசர பயன்பாட்டுக்கு கடந்த ஆண்டு டிசம்பா் 28-ஆம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.