
ஆபாசப் படங்களைத் தயாரித்த வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிற்கு உதவியதாக மேலும் 4 பேர் கைதாகியுள்ளனர்.
ஆபாச படங்களை தயாரித்து அவற்றை செல்லிடப்பேசி செயலிகள் மூலம் வெளியிட்டதாக கடந்த ஜூலை 19-ஆம் தேதி ராஜ் குந்த்ராவை காவர்கள் கைது செய்தனா்.
அவருடன் இணைந்து நடிகைகளை மிரட்டி ஆபாசப் படங்களில் நடிக்க வைத்ததாக சிலர் கைதாகினர்.
இவ்வழக்கு விசாரணையில் ராஜ் குந்த்ராவிற்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. பின், ஜாமினில் அவர் வெளியே வந்தார்.
இந்நிலையில், ராஜ் குந்தராவுடன் ஆபாசப் படங்களைத் தயாரித்தாக நடிகர்களைத் தேர்வு செய்யும் இயக்குநர் உள்ளிட்ட 4 பேரை மும்பை குற்றப் புலனாய்வு காவலர்கள் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.