92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

'ஐ லவ் யூ' பாலியல் தொல்லை அல்ல: நீதிமன்ற தீர்ப்பால் விடுதலையான இளைஞர்

ஐ லவ் யூ என்பது பாலியல் தொல்லை அல்ல என்று மும்பை சிறப்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :23 பிப்ரவரி 2022, 10:44 am

DIN


ஐ லவ் யூ என்பது பாலியல் தொல்லை அல்ல என்று மும்பை சிறப்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒருவரிடம் தங்களை காதலிப்பதாகக் கூறுவது குற்றமல்ல, அது தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம்தான் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

மும்பையில் 22 வயது இளைஞர் 17 வயது சிறுமியிடம் பின் தொடர்ந்து சென்று 'ஐ லவ் யூ' என்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கல்பனா பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம், ஒரு நிகழ்வில் ஒருவரிடம் மற்றொருவர் 'ஐ லவ் யூ' என்று கூறுவது தன்னுடைய உணர்வுகளை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துவது. உள்நோக்கத்துடனும், பாதிக்கப்பட்டவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து சென்று அவ்வாறு கூறுவதுதான் சட்டப்படி குற்றம். குற்றம் சாட்டப்பட்டவர் உள்நோக்கத்துடனும், சிறுமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பாலியல் உள்நோக்கத்துடனும் இதனை செய்துள்ளார் என்பதை நிரூபிக்கவில்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை விடுவித்து உத்தரவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.