தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க 3 நாள்களுக்கு இலவச அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க 3 நாள்களுக்கு இலவச அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஷாஜகானின் பிறந்தநாளை முன்னிட்டு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் 3 நாள்களுக்கு அனுமதி இலவசம் என இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. 
Published on


ஆக்ரா: ஷாஜகானின் பிறந்தநாளை முன்னிட்டு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 3 நாள்களுக்கு அனுமதி இலவசம் என இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
ஐந்தாவது முகலாயப் பேரரசர் ஷாஜகானின் 367 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பிப்ரவரி 27, 28 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரையும், மார்ச்ச 1 ஆம் தேதி சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை இலவசமாக பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அன்றைய நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் தாஜ்மஹாலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தாஜ்மஹாலுக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் கரோனா முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் ஷாஜகானின் பிறந்தநாளையொட்டி இந்த விலக்கு அளிக்கப்படுகிறது. இது தவிர, உலக சுற்றுலா தினத்தன்று தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com