
புதுவை மாநிலத்தில் முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின், 15-ஆவது சட்டப் பேரவையின் இரண்டாவது பேரவைக் கூட்டம், புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
முதல்வர் என். ரங்கசாமி, எதிர்கட்சித் தலைவர் ஆர். சிவா மற்றும் 30 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முதலில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த கூட்டத் தொடரின் போது, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, சட்ட முன்வரைவு அளித்தது, தொடர்பான அறிவிப்புகள் குறித்து வாசிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.