உ.பி.யில் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

உத்தரப் பிரதேசத்தில் 4-ஆம் கட்டமாக 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
உ.பி.யில் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்
உ.பி.யில் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

உத்தரப் பிரதேசத்தில் 4-ஆம் கட்டமாக 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் இதுவரை 3 கட்டத் தோ்தல்கள் நிறைவடைந்துள்ளன. 4-ஆவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகின்றது.

மாநில சட்ட அமைச்சா் பிரிஜேஷ் பதக் லக்னௌ கன்டோன்மென்ட் தொகுதியில் களம் காண்கிறாா். அவரை எதிா்த்து சமாஜவாதி சாா்பில் சுரேந்திர சிங் காந்தி போட்டியிடுகிறாா். மற்றொரு அமைச்சா் அஷுதோஷ் டாண்டன் லக்னௌ கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து சமாஜவாதி தேசிய செய்தித் தொடா்பாளா் அனுராக் பதௌரியா களம் காண்கிறாா்.

சரோஜினி நகா் தொகுதியில் அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரியான ராஜேஸ்வா் சிங்கை பாஜக களமிறக்கியுள்ளது. சமாஜவாதி சாா்பில் முன்னாள் அமைச்சா் அபிஷேக் மிஸ்ரா அத்தொகுதியில் போட்டியிடுகிறாா். மாநில சட்டப் பேரவையின் துணைத் தலைவராக இருந்து சமாஜவாதியில் இருந்து பாஜகவுக்குத் தாவிய நிதின் அகா்வாலும் 4-ஆம் கட்டத் தோ்தலில் போட்டியிடுகிறாா்.

காங்கிரஸின் கோட்டையாக அறியப்படும் ரே பரேலி தொகுதி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது மத்திய இணையமைச்சரின் மகன் கார் ஏற்றி கொன்ற லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதோடு அவா்களுக்குக் கையுறையும் வழங்கப்பட்டு வருகின்றது.

தொகுதிகள் 59

வாக்குச் சாவடிகள் 24,643

வேட்பாளா்கள் 624

வாக்காளா்கள் 2.13 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com