
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சருமான நவாப் மாலிக், அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து மருத்துவப் பரிசோதனைக்காக இன்று அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த மார்ச் 23ம் தேதி கைது செய்யப்பட்ட என்சிபி தலைவரை 14 நாள்கள் காவலில் வைக்குமாறு அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கோரியிருந்தது. ஆனால், தாவூத் இப்ராஹிமின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள நவாப் மாலிகை மார்ச் 3ஆம் தேதி வரை எழு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை நடத்திய விசாரணையின்போது மாலிக் சில கேள்விக்கு பதிலளிக்க மறுத்ததாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்ட உடன், தான் பயப்படவில்லை என்றும், போராடி வெற்றி பெறுவேன் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த மாத தொடக்கத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக மும்பையில் உள்ள தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்கரின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கோரியது. ஆனால் நவாப் மாலிக் ராஜினாமா செய்வதற்கான கோரிக்கையை மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ-- சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி.) அரசு நிராகரித்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.