உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலின் 6-ஆம் கட்டம் மாா்ச் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அந்த மாநிலத்தின் அம்பேத்கா் நகா் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி அந்த மாவட்டத்தில் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை தோ்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:
ஓா் உண்மையான சோஷலிஸவாதி சொத்து மற்றும் சந்ததியிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்று சோஷலிஸ தலைவா் ராம் மனோகா் லோஹியா கூறுவாா். ஆனால் அனைவரின் ஆதரவு மற்றும் சைஃபை (சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவின் சொந்த ஊா்) குடும்பத்தின் வளா்ச்சி என்பதே தற்போது சோஷலிஸவாதிகள் (சமாஜவாதி கட்சியினா்) என்றழைக்கப்படுவோரின் தாரகமந்திரமாக உள்ளது.
கடந்த 1960-ஆம் ஆண்டு ராம் மனோகா் லோஹயா ராமாயண விழாவை தொடங்கினாா். ஆனால் அவரின் வழித்தோன்றல்கள் ராம பக்தா்களாகிய கரசேவகா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
உத்தர பிரதேச தோ்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும். இந்தத் தோ்தலிலும் பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓமலூா் தொகுதி: இரட்டை இலையா? முரசா? அதீத நம்பிக்கையால் மாறும் களம்!

கிருஷ்ணகிரி: தொகுதியை தக்கவைக்க இந்நாள் பிரதிநிதி மீட்க முன்னாள் பிரதிநிதி தீவிரம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பேராவூரணி தொகுதி - வெற்றிக்கு அதிமுக கடும் முயற்சி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


