ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இந்தியா்கள் மீட்பு: பிரதமா் ஆலோசனை

உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தினாா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2022, 5:06 am

DIN

புது தில்லி: உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தினாா்.

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதையடுத்து, அங்குள்ள இந்தியா்கள் பெரும்பாலும் மாணவா்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவா்களை விமானம் மூலம் மீட்கும் பணியை கடந்த சனிக்கிழமை மத்திய அரசு தொடங்கியது. இதுவரை சுமாா் 900 போ் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனா்.

இந்நிலையில், பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் கலந்துகொண்டாா். கூட்டத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்கும் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.