ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

திருவனந்தபுரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

திருவனந்தபுரத்தில் குப்பைகள் சேகரித்துவைக்கும் கிடங்கில் இன்று பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :3 ஜனவரி 2022, 10:42 am

DIN

திருவனந்தபுரத்தில் குப்பைகள் சேகரித்துவைக்கும் கிடங்கில் இன்று பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

கேரளத்தின் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனாவில் குப்பைக் கிடங்கில் இன்று பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியுள்ளது. சில மீட்டர் தொலைவில் தனியார் மருத்துவமனை ஒன்றும் உள்ளது. 

முதலில் தீயினை அணைக்க இரண்டு தீயணைப்புப் படைகள் வந்த நிலையில், பின்னர் சிரமம் ஏற்பட்டதால் கூடுதலாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். 

அதிக அளவில் புகை மூட்டமாக இருந்ததாலும் கிடங்கில் கண்ணாடி உள்ளிட்ட பொருள்கள் சிதறியிருந்ததாலும் தீயினை அணைக்க சற்று சிரமம் ஏற்பட்டதாக வீரர்கள் தெரிவித்தனர். தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் ஏதுமில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.