விவசாயிகள் உயிரிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியபோது மிக ஆணவத்துடன் பதிலளித்ததாக மேகாலய ஆளுநர் சத்ய பால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஹரியாணா மாநிலத்தில் தாத்ரி பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் மேகாலய ஆளுநர் ஞாயிற்றுக்கிழமை(ஜன.2) கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், பிரதமர் மோடி குறித்து அவர் பேசிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
மோடி குறித்து ஆளுநர் பேசியதாவது:
“சமீபத்தில் வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடியை சேரில் சந்தித்தேன். நாங்கள் விவாதிக்க ஆரம்பித்த 5 நிமிடங்களிலேயே பிரதமர் கோபத்துடனும், ஆணவத்துடனும் பேசினார்.
நம் நாட்டின் 500 விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்துள்ளதாக கூறியபோது, அவர்கள் எனக்காகவா இறந்தார்கள்? என கேள்வி எழுப்பினார்.
ஆமாம். நீங்கள்தான் நாட்டின் பிரதமர் எனக் கூறினேன். பின்னர், கோபமடைந்த பிரதமர் அமித் ஷாவை சந்திக்குமாறு தெரிவித்துவிட்டார்.”
இந்த காணொலியை காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.