காங்கிரஸின் பேரணிகளை ஒத்திவைக்க முடிவு: பொதுச் செயலாளர்

கரோனா காரணமாக காங்கிரஸ் கட்சியின் அனைத்து பேரணிகளும் ரத்து செய்யப் படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கே.சி.வேணுகோபால் (கோப்புப் படம்)
கே.சி.வேணுகோபால் (கோப்புப் படம்)

கரோனா காரணமாக காங்கிரஸ் கட்சியின் அனைத்து பேரணிகளும் ரத்து செய்யப் படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மார்ச் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பிரசாரத்தை அனைத்து கட்சியினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே கரோனா நோய்த் தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் கட்சிகளின் பேரணிகளும், பொதுக் கூட்டங்களும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் இன்று வெளியிட்ட செய்தியில்,

“உத்தரப் பிரதேசம் மற்றும் தேர்தல் நடைபெறும் பிற மாநிலங்களில் காங்கிரஸ் திட்டமிட்டிருந்த அனைத்து பெரிய பேரணிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

கட்சியின் மாநில நிர்வாகங்களுடன் கரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய பிறகு பேரணிகள் எப்போது நடத்துவது என முடிவெடுக்கப்படும்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com