முடி வெட்டும்போது தலையில் எச்சில் துப்பிய ஒப்பனையாளர்; காவல்துறை வழக்குப்பதிவு

நீண்ட நேரமாக நடைபெற்ற பயிற்சி வகுப்பில், நகைச்சுவை உணர்வை கொண்டு வரவே எச்சில் துப்பினேன் என முடி ஒப்பனையாளர் ஜாவேத் ஹபீப் தெரிவித்துள்ளார்.
முடி வெட்டும்போது தலையில் எச்சில் துப்பிய ஒப்பனையாளர்
முடி வெட்டும்போது தலையில் எச்சில் துப்பிய ஒப்பனையாளர்

கடந்த வாரம், மேற்கு உத்தரப் பிரதேசம் முசாபர்நகரில் முடி ஒப்பனை குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட முடி ஒப்பனையாளர் ஜாவேத் ஹபீப், பெண்ணின் முடியை எப்படி ஒப்பனை செய்வது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கி கொண்டிருந்தார். அப்போது, பெண்ணில் தலையில் அவர் எச்சிலை துப்பினார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஜாவேத்துக்கு எதிராக அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு மத்தியில், பயிற்சி வகுப்பில் பெண்ணின் தலையில் அவர் எச்சில் துப்பிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. அதில், "தண்ணீர் இல்லை எனில், எச்சிலை பயன்படுத்துங்கள்" என ஜாவேத் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு விளக்கம் அளித்த ஜாவேத், "நீண்ட நேரமாக நடைபெற்ற பயிற்சி வகுப்பில், நகைச்சுவை உணர்வை கொண்டு வரவே எச்சிலை துப்பினேன்" என்றார்.

பயிற்சி வகுப்பில் தனக்கு நடந்த அனுபவத்தை விவரித்த பூஜா குப்தா, "நேற்று, ஜாவேத் ஹபீப்பின் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டேன். முடி வெட்டுவதற்காக என்னை மேடைக்கு அழைத்தார். தண்ணீர் இல்லை என்றால் எச்சிலை பயன்படுத்தலாம் என்றார். இனிமேல், என் தெருவோர முடிதிருத்துபவரிடம் முடி வெட்டப் கூட போவேன், ஆனால் ஹபீப்பிடம் செல்லமாட்டேன்" என்றார்.

இந்த விடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, குறிப்பிட்ட நபருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரப் பிரதேச காவல்துறையை தேசிய பெண்கள் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது. 

பின்னர், சமூகவலைதளத்தில் விடியோ மூலம் மற்றொரு விளக்கத்தை அளித்துள்ள ஜாவேத், "எங்கள் பயிற்சி வகுப்பு தொழில்முறையோடு நடைபெற்றுவருகிறது. அமர்வுகள் நீண்ட நேரம் செல்வதால், அவற்றை நகைச்சுவையாக ஆக்குகிறோம். எனது செயல் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

நபரை அவமதிக்கும் நோக்கத்துடன் நடந்து கொள்வது, கொள்ளை நோய்கள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com