ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 2 நாட்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கரும் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 2 நாட்களாக மூடப்பட்டது.
இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நெடுஞ்சாலையில் உள்ள கற்கள் அகற்றப்பட்டு நிலைமை சீரானதால் இன்று வாகனங்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் அனுமதித்தனர்.
கடந்த புதன்கிழமை முதல் நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் 3000-துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கமுடியாமல் சிக்கித் தவித்த மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.