ஐந்து மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. 

முழு விவரம்:

முதற் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 10ஆம் தேதி
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 14ஆம் தேதி
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 20ஆம் தேதி
நான்காம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 23ஆம் தேதி 
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 27ஆம் தேதி
ஆறாம் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 3
கடைசி கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 7

பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மணிப்பூரை பொறுத்தவரை வாக்குப்பதிவு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

முக்கிய தகவல்கள்:

  • ஐந்து மாநிலங்களில் மொத்தம் 690 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. 
  • வேட்பு மனுக்களை இணையத்தில் தாக்கல் செய்யலாம்.
  • ஐந்து மாநிலங்களில் 18.34 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர்.
  • வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • வரும் ஜனவரி 15 வரை, பேரணிகளுக்கு அனுமதி இல்லை.
  • கரோனாவால் பாதிக்கப்பட்டோர் தபாம் மூலம் வாக்களிக்கலாம்.
  • இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரசாரத்திற்கு தடை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com