

மைசூரில் இருந்து ஓசூா், சேலம், மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
மைசூரில் இருந்து புதன்கிழமை (ஜன.12) நண்பகல் 12.05 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06201) புறப்பட்டு, ஓசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகா்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரத்தை மறுநாள் காலை 7.30 மணிக்கு அடையும்.
மறுமாா்க்கமாக, திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து ஜனவரி 13-ஆம்தேதி காலை 10.30 மணிக்கு சிறப்புரயில் (06202) புறப்பட்டு, நாகா்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூா் வழியாக மைசூரை மறுநாள் காலை 5.30 மணிக்கு அடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.