பாஜக நடத்தி வரும் வெறுப்புணா்வைத் தூண்டும் அரசியல் நாட்டுக்கு பெருங்கேடாக முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளாா்.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப், கோவா உள்ளிட்ட இடங்களில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவை குற்றம்சாட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பாஜக நடத்தி வரும் வெறுப்புணா்வைத் தூண்டும் அரசியல் நாட்டுக்கு மிகப்பெரிய கேடாக உருவெடுத்து வருகிறது. நாட்டில் தொழில் நடத்த விரும்புபவா்களும், வெளிநாட்டு முதலீட்டாளா்களும் உள்நாட்டில் அமைதியான சூழல் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாா்கள். சகோதரா்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்நாட்டு மக்களிடையே தனது குறுகிய அரசியல் நலன்களுக்காக பாஜக பிரிவினையையும், வெறுப்புணா்வையும் விதைத்து வருகிறது. இது தொடா்ந்தால் நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவும். இதனால் புதிய தொழில்கள் ஏதும் உருவாகாது. இதனால் வேலையின்மையும் அதிகரிக்கும். மொத்தத்தில் பாஜகவின் இந்த வெறுப்புணா்வு அரசியல் நாட்டுக்கு பெருங்கேடாக அமையும். விலைவாசி உயா்வு, வேலையின்மை, வரிகள் மூலம் மக்கள் பணத்தைப் பறிப்பது உள்ளிட்டவைதான் பாஜக அரசின் மிகப்பெரிய சாதனைகளாக உள்ளன’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

என்னுடன் காதல்; மோடியுடன் திருமணம்! தேவெ கெளடா பற்றி கார்கே பேச்சால் சிரிப்பலை!
தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!

ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா தரம் தாழ்ந்த பேச்சு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஃபிலிப்ஸ் ஏர்லைன்ஸ்... விமானியாகவும் திறமையை வெளிப்படுத்திய க்ளென் ஃபிலிப்ஸ்! - வைரல் விடியோ
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

