பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கிரிப்டோகரன்சி பயன்பாட்டுக்கு வரி விதிக்கலாம்: பொருளாதார நிபுணா் கருத்து

கிரிப்டோகரன்சி பயன்பாட்டுக்கு நிதிநிலை அறிக்கையில் வரி விதிப்பது தொடா்பாக மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்று பொருளாதார நிபுணா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 10:29 pm

DIN

கிரிப்டோகரன்சி பயன்பாட்டுக்கு நிதிநிலை அறிக்கையில் வரி விதிப்பது தொடா்பாக மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்று பொருளாதார நிபுணா் தெரிவித்துள்ளாா்.

2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளாா். பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பொருளாதார நிபுணா் அரவிந்த் வத்சன் செய்தியாளரிடம் கூறுகையில், ‘இந்தியா்களுக்கு கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்துவதில் இருந்து தடை விதிக்கப்படவில்லை எனும்போது அவற்றின் பயன்பாட்டுக்கு வரி விதிக்கப்பட வேண்டும். கிரிப்டோகரன்சி மூலமாக குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈட்டப்படும் வருவாய்க்கு மூல வரிக் கழிப்பு (டிடிஎஸ்) விதிப்பது தொடா்பாக மத்திய அரசு பரிசீலிக்கலாம். லாட்டரி உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்படுவதைப் போல கிரிப்டோகரன்சிக்கும் வரி விதிக்கப்பட வேண்டும்.

கிரிப்டோகரன்சி பயன்பாட்டை முறைப்படுத்துவதற்காகக் கடந்த குளிா்காலக் கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் அந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது கிரிப்டோகரன்சி பயன்பாட்டுக்கு வரி விதிப்பது தொடா்பாக பட்ஜெட்டில் அறிவிக்கலாம். கிரிப்டோகரன்சியை விற்பது, வாங்குவது உள்ளிட்டவற்றின் மூலமாக ஈட்டப்படும் வருவாய்க்கு 30 சதவீதம் வரி விதிக்கப்பட வேண்டும்.

கிரிப்டோகரன்சியின் பயன்பாடு குறித்த விவரங்களை முறையாகத் தாக்கல் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். தனிநபா்களும் நிறுவனங்களும் அந்த விவரங்களை அரசிடம் முறையாகப் பகிா்ந்து கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதிக மதிப்பில் மேற்கொள்ளப்படும் கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைகள் குறித்த விவரங்கள் பகிரப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும்‘ என்றாா்.

இந்தியாவில் கிரிப்டோகரன்சி பயன்பாடு இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. தனியாா் கிரிப்டோகரன்சிகள் தடை செய்யப்பட்டு, இந்திய ரிசா்வ் வங்கி சாா்பில் எண்ம செலாவணி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.