புதிய சீருடையில் ராணுவத் தலைமைத் தளபதி
இந்திய ராணுவத்தின் புதிய சீருடை அணிந்து ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே ஆய்வு மேற்கொள்ளும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ராணுவ தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவத்திற்கு புதிய சீருடை அறிமுகபடுத்தப்பட்டது. பல்வேறு சூழல்களுக்கு வசதியான, தட்ப வெப்பத்திற்கு ஏற்றவாறு புதிய சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | இந்திய ராணுவத்திற்கு புதிய சீருடை; சுவாரஸ்ய தகவல்கள் இதோ...
இந்நிலையில், ராணுவ கிழக்கு பிராந்தியத்தில் ராணுவ வீரர்களின் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்ற எம்.எம்.நரவணே புதிய சீருடை அணிந்து சென்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.