உத்தரகண்ட் பேரவைத் தேர்தலில் 60 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும்: முதல்வர் புஷ்கா் சிங் தாமி

உத்தரகண்ட் பேரவைத் தேர்தலில் 60 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்று முதல்வர் புஷ்கா் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் பேரவைத் தேர்தலில் 60 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும்: முதல்வர் புஷ்கா் சிங் தாமி

உத்தரகண்ட் பேரவைத் தேர்தலில் 60 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்று முதல்வர் புஷ்கா் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கான வேட்பாளா் பட்டியலை ஆளும் பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது. 11 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் மட்டும் அறிவிக்கப்படவில்லை. இந்த 11 தொகுதிகளில் பெரும்பாலானவை கடந்த தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றவையாகும். 
வேட்பாளா் பட்டியலின்படி முதல்வா் புஷ்கா் சிங் தாமி கடந்த முறை வெற்றி பெற்ற காட்டிமா தொகுதியிலும், மாநில பாஜக தலைவா் மதன் கெளசிக் ஹரித்வாா் தொகுதியிலும் போட்டியிடுகின்றனா். இதேபோல பெரும்பாலான அமைச்சா்கள், எம்எல்ஏக்களுக்கு கடந்த முறை அவா்கள் வென்ற தொகுதிகளிலேயே போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் உத்தரகண்ட் பேரவைத் தேர்தலில் 60 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கா் சிங் தாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் தேர்தலுக்கு முழுமையாக தயாராக உள்ளோம். இந்த முறை வெற்றி பெறுவோம். உத்தரகண்ட் மக்கள் பாஜகவுடன் உள்ளனர். 
பிரதமர் மோடி தலைமையில் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளோம். இந்த முறை 60 இடங்களுக்கு மேல் என்ற முழக்கத்தை நிச்சயம் அடைவோம். எங்களுக்கு மற்றவர்களுடன் எந்தப் போட்டியும் இல்லை. ஜனவரி 20 ஆம் தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பட்டியல் வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com