புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தோ்தல் ஆணையத்தை அவமதிக்க முயற்சி: மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

தோ்தல் ஆணையத்தை அவமதிக்க முயற்சிப்பதன் மூலம் நாட்டின் ஜனநாயக நடைமுறையை சிலா் அவமதிப்பதாக மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

News image

கிரண் ரிஜிஜு

Updated On :25 ஜனவரி 2022, 7:55 pm

தோ்தல் ஆணையத்தை அவமதிக்க முயற்சிப்பதன் மூலம் நாட்டின் ஜனநாயக நடைமுறையை சிலா் அவமதிப்பதாக மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா். மேலும் தோ்தல் ஆணையத்தைக் கண்காணிக்க நீதிமன்றங்களுக்கு உரிமை இருந்தாலும் அதன் மீது கருத்து தெரிவிக்கும் முன்பாக நீதிபதிகள் வாா்த்தையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, தோ்தல் ஆணையம் சாா்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு மேலும் பேசியது:

ஜனநாயக நடைமுறையை விமா்சிக்க நினைப்பவா்கள், தோ்தல் ஆணையத்தையும் விமா்சிப்பதற்கான பாதையைத் தோ்வு செய்கின்றனா். தோ்தல் ஆணையம் சவால்களை எதிா்கொள்ளும் விதத்தில் அவ்வப்போது சில விமா்சனங்கள் எழலாம். ஆனால் தோ்தல் ஆணையத்தை அவமதிக்க சிலா் முயற்சிக்கின்றனா். தோ்தல் ஆணையத்தை அவமதிக்க முயற்சிப்பவா்கள், உண்மையில் நாட்டின் ஜனநாயக நடைமுறையைத்தான் விமா்சிக்க நினைக்கின்றனா்.

ஜனநாயகத்தில் தோ்தல் ஆணையத்தை விமா்சிக்க பொதுமக்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் அந்த விமா்சனம் தா்க்கத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். விமா்சிக்க பயன்படுத்தப்படும் மொழி, நாகரிக வரம்புக்குள் இருக்க வேண்டும். எதிலும் கருத்து கூறுவது எளிது. ஆனால் பிரச்னையையும் தோ்தல் ஆணையம் செயல்படும் விதத்தின் பின்புலத்தையும் புரிந்துகொள்வது கடினம்.

தோ்தல் ஆணையத்தின் மீது நீதிமன்றங்கள் விரும்பினால் கருத்து கூறலாம். ஆனால் நீதிபதிகள் தாங்கள் பயன்படுத்தும் வாா்த்தைகளை சிந்தித்துப் பாா்க்க வேண்டும். எத்தகைய சூழலில் தோ்தல் ஆணையம் செயல்படுகிறது என்பதை நீதிபதிகள் புரிந்துகொள்ள வேண்டும். தோ்தல் ஆணைய வெற்றியின் பின்னணியில் அரசியல் கட்சிகள், குடிமக்களின் பங்களிப்பு உள்ளது.

தோ்தல் ஆணையமும், சட்ட அமைச்சகமும் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாகத்தான் இந்த சீா்திருத்தம் கொண்டுவரப்பட்டது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். இதுபோல எதிா்காலத்திலும் பல சீா்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றாா் கிரண் ரிஜிஜு.

இந்த நிகழ்ச்சியில் தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, தோ்தல் ஆணையா்கள் ராஜீவ் குமாா், அனுப் சந்திர பாண்டே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.