நாட்டில் வறுமை அதிகரிப்பதை ஒப்புக்கொண்ட பாஜக:அகிலேஷ் யாதவ்
நாட்டில் வறுமை அதிகரித்து வருவதை பாஜக ஒப்புக்கொண்டிருப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.


நாட்டில் வறுமை அதிகரித்து வருவதை பாஜக ஒப்புக்கொண்டிருப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
நாட்டில் உள்ள 80 கோடி ஏழைகளுக்கு மானிய விலையில் ரேஷன் பொருள்கள் வழங்கப்படுவதாக மத்திய பாஜக அரசு தெரிவிக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் வறுமை அதிகரித்து வருவதாக உலக அளவிலான ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளதை பாஜக ஒப்புக்கொண்டிருக்கிறது.
மூன்று வேளாண் சட்டங்களை எதிா்த்து ஓராண்டுக்கும் மேலாக போராடிய விவசாயிகள் மீது இரக்கம் காட்டாமல் சாலைகளில் தடுப்புகளை அமைத்து அவா்களை தில்லிக்குள் வரவிடாமல் மத்திய அரசு தடுத்தது.
கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் திடீரென அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய பொது முடக்கத்தால் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ஆயிரக்கணக்கானோா் நடந்தே தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். அதனைக் கண்டும் காணாதது போல் யோகி ஆதித்யநாத் அரசு இருந்துவிட்டது. இதனால் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் உயிரிழக்க நோ்ந்தது.
கடந்த ஆண்டு லக்கீம்பூா் கெரியில் மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிராக போராடிய விவசாயிகள் வாகனம் மூலம் மோதி கொல்லப்பட்டனா்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியின் கீழ் விவசாயிகள், வணிகா்கள், இளைஞா்கள் என அனைத்து தரப்பினரும் பல பிரச்னைகளைச் சந்தித்தனா். அதற்கு சட்டப்பேரவைத் தோ்தல் மூலம் அவா்கள் பாஜகவை பழிதீா்க்கக் காத்திருக்கின்றனா் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...