ராகுல் காந்தியிடம் கைவரிசை...சர்ச்சையை கிளப்பிய ஹர்சிம்ரத் கெளரின் ஒற்றை ட்விட்

புதன்கிழமை, பஞ்சாப் மாநிலத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

"ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பில் (பொற்கோயில்) ராகுல் காந்தியிடம் திருடியது யார்" என முன்னாள் மத்திய அமைச்சரும் சிரோமணி அகாலி தள கட்சியின் எம்பியுமான ஹர்சிம்ரத் கெளர் சனிக்கிழமை ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இவரின் ஒற்றை ட்வீட் பெரும் சரச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு பதிலடி அளித்துள்ள காங்கிரஸ், பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது. முன்னதாக, புதன்கிழமை, பஞ்சாப் மாநிலத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். 

வரும் பிப்ரவரி 20ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரம் மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி பஞ்சாப் சென்றிருந்தார். பின்னர், அன்று மாலை, ஜலந்தர் சென்ற அவர், இணைய வழியாக பேரணியில் கலந்து கொண்டார்.

ராகுல் காந்தியுடன் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, துணை முதல்வர்கள் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, ஓபி சோனி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

இந்நிலையில், ஹர்சிம்ரத் கெளர் நேற்று ட்விட்டர் பக்கத்தில், "ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பில் ராகுல் காந்தியிடம் பிக்பாக்கெட் அடித்தது யார்? சரண்ஜித் சிங் சன்னியா? நவ்ஜோத் சித்துவா? அல்லது சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா? இசட் பாதுகாப்பை தாண்டி அவர் அருகே செல்ல இவர்கள் மூன்று பேருக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டது.

அல்லது மதத்தை அவமதித்த சம்பவங்களுக்குப் பிறகு, நமது புனித தலத்திற்கு கெட்ட பெயரைக் கொண்டுவருவதற்கான மற்றொரு முயற்சியா?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

இருப்பினும், ராகுல் காந்தியிடம் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த பிற தகவல்களை அவர் வெளியிடவில்லை. இந்த பதிவை ரீட்வீட் செய்துள்ள காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாதபோது இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவது மத நெறிமுறைகளை மீறுவது போன்று. அரசியல் வேறுபாடுகள் தவிர்த்து, அவர் பொறுப்பாகவும் முதிர்ச்சியாகவும் நடந்து கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com