87 குற்றவாளிகளின் பட்டியலை பிகாரிடம் அளித்த உ.பி. காவல்துறை

பிகாரில் தேடப்பட்டு வந்த 87 குற்றவாளிகளின் பெயர் பட்டியலை உத்தரப் பிரதேச காவல்துறை ஒப்படைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
87 குற்றவாளிகளின் பட்டியலை பிகாரிடம் அளித்த உ.பி. காவல்துறை

பிகாரில் தேடப்பட்டு வந்த 87 குற்றவாளிகளின் பெயர் பட்டியலை உத்தரப் பிரதேச காவல்துறை ஒப்படைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

உத்தரப் பிரதேசத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் எஸ்.பி மற்றும்  ஏ.எஸ்.பி.,களுக்கு பிகார் சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் சஞ்சய் சிங் உத்தரவிட்டார். 

இதையடுத்து, தீவிர நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் விளைவாக 87 குற்றவாளிகளின் பெயர் பட்டியலை உ.பி.காவல்துறை பிகாரிடம் ஒப்படைத்துள்ளது. 

அதிகபட்ச குற்றவாளிகள் பிகாரின் பாகல்பூர் மற்றும் கோசி மலைப்பகுதியைச் சேர்ந்தவர்கள். தவிர, சில குற்றவாளிகள் சிவான், கோபால்கஞ்ச், மேற்கு சம்பாரன், பக்சர், ரோஹ்தாஸ், கைமூர், போஜ்பூர் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பிற கொடூரமான குற்றங்களின் கீழ் உத்தரப் பிரதேச மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com