
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இணைய சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உதய்பூா் தன்மண்டி பகுதியில் தையல் கடை வைத்திருந்த கன்னையா லால் என்பவர் இஸ்லாம் குறித்து சமூக வலைதளத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததற்காக கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்டார்.
தையல்காரா் கொலை செய்யப்பட்டதை அடுத்து உதய்பூா் முழுவதும் வியாபாரிகளின் போராட்டம் வெடித்ததால், உதய்பூரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன், கைப்பேசி இணையதள சேவையும் முடக்கப்பட்டது.
இந்த நிலையில்,பதற்றம் தணிந்ததை அடுத்து உதய்ப்பூரில் இணைய சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.