மகிழ்ச்சியான செய்தி: சமையல் எண்ணெய் விலை குறைகிறதா?

நேற்று சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்ந்த நிலையில், இன்று சமையல் எண்ணெய் விலை ரூ.10 அளவுக்குக் குறையவிருக்கும் நல்ல செய்தி கிடைத்துள்ளது.
மகிழ்ச்சியான செய்தி: சமையல் எண்ணெய் விலை குறைகிறதா?
மகிழ்ச்சியான செய்தி: சமையல் எண்ணெய் விலை குறைகிறதா?

நேற்று சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்ந்த நிலையில், இன்று சமையல் எண்ணெய் விலை ரூ.10 அளவுக்குக் குறையவிருக்கும் நல்ல செய்தி கிடைத்துள்ளது.

சா்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் சில்லரை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்க வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், சமையலுக்குப் பயன்படுத்தும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் விலைகள் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 அளவுக்குக் குறையும் என்றும், இது அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும், சர்வதேச சந்தையில் விலை குறையும் போது, ஒரு வாரத்துக்குள் அந்த விலைக்குறைப்பை நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூன் மாதத்தைக் காட்டிலும் ஜூலை மாதம் 5 ரூபாய் அளவுக்கு சமையல் எண்ணெய் விலை குறைந்த நிலையில், அடுத்த வாரத்துக்குள் மேலும் 10 ரூபாய் அளவுக்குக் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் சமையல் எண்ணெய்த் தேவையில் 60 சதவீதம் வெளிநாட்டு இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சா்வதேச சந்தையில் சமையல் எண்ணெயின் விலை உயா்ந்ததால், இந்தியாவில் சில்லறை விற்பனை விலையிலும் தாக்கம் ஏற்பட்டது. பின்னா், சா்வதேச சந்தையில் விலை குறைந்ததால், இந்தியாவிலும் விலை குறைக்கப்பட்டது. எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கடந்த மாதம் குறைத்தன.

தற்போது சா்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் அனைத்து எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம், உணவுத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு சுதான்ஷு பாண்டே கூறியதாவது:

சா்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை கடந்த வாரம் மட்டும் 10 சதவீதம் வரை குறைந்தது. இந்த விலைக் குறைப்பின் பயனை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தியாளா்களிடம் கூறினேன். அதற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து சமையல் எண்ணெய்களின் விலையை அடுத்த வாரத்துக்குள் லிட்டருக்கு ரூ.10 வரை குறைப்பதாக அவா்கள் உறுதியளித்தனா்.

ஒரே பிராண்ட் சமையல் எண்ணெய், வெவ்வேறு மண்டலங்களில் வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை விலை வித்தியாசம் உள்ளது. போக்குவரத்து செலவும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் சோ்க்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினேன். அதன் பிறகு ஒரே விலையில் விற்பனை செய்ய எண்ணெய் உற்பத்தியாளா்கள் ஒப்புக்கொண்டனா்.

எண்ணெயை 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பேக்கிங் செய்ய வேண்டும். ஆனால், 15 டிகிரி செல்சியஸில் சில நிறுவனங்கள் பேக்கிங் செய்கின்றன. இந்த நியாயமயற்ற வா்த்தக நடைமுறைகளையும் சுட்டிக்காட்டினேன் என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com