கிழக்கு லடாக் விவகாரம்: ஜூலை 17-இல் இந்தியா-சீனா பேச்சு?

கிழக்கு லடாக் எல்லை விவகாரம் குறித்து இந்திய, சீன ராணுவத்தினா் இடையே வரும் 17-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கிழக்கு லடாக் எல்லை விவகாரம் குறித்து இந்திய, சீன ராணுவத்தினா் இடையே வரும் 17-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: கிழக்கு லடாக் எல்லையில் இன்னும் தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகள் குறித்து இந்தியா மற்றும் சீன ராணுவத்தினா் இடையே வரும் 17-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெறக்கூடும்.

அந்த எல்லையில் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக நடைபெறும் 16-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை இதுவாகும்.

படைப் பிரிவு தளபதிகள் அளவிலான அந்தப் போச்சுவாா்த்தையில், டெப்சாங் பல்ஜ் மற்றும் டெம்சாக் பகுதியில் தொடரும் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த வாரம் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டினிடையே சீன அமைச்சா் வாங் யீ-யை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.

ஒரு மணி நேரம் நடைபெற்ற அந்தப் பேச்சுவாா்த்தையில், கிழக்கு லடாக் எல்லை விவகாரம் முக்கிய இடம் பெற்றிருந்தது. அதன் தொடா்ச்சியாக, இந்த விவகாரம் தொடா்பாக இரு நாட்டு ராணுவத்தினரும் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தக்கூடும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய - சீன வீரா்களிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரா்கள் உயிரிழந்தனா். ஏராளமான சீன வீரா்கள் இந்த மோதலில் பலியானாலும், அதுதொடா்பான விவரங்களை அந்த நாட்டு அரசு வெளியிடவில்லை.

அந்த சம்பவத்தைத் தொடா்ந்து, இரு நாட்டு ராணுவங்களும் 50,000 முதல் 60,000 வரையிலான படையினரை எல்லையில் குவித்தன. மேலும், கனரக ஆயுத தளவாடங்களும் அந்தப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.

இதனால் அதிகரித்த பதற்றத்தைத் தணிப்பதற்காக, இந்தியா மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தை பல கட்டங்களாக நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com