குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவைக் கோருவதற்காக ராஜஸ்தானில் உள்ள பாஜக எம்எல்ஏ.க்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று சந்திக்கிறார்.
முர்மு புது தில்லியிலிருந்து வாடகை விமானம் மூலம் இங்கு வந்தார். தலைநகரில் மோசமான வானிலை காரணமாக அவரது விமானம் தாமதமானது.
அவரை பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர். அவரை வரவேற்க ஏராளமான பாஜக தொண்டர்களும் விமான நிலையத்தில் குவிந்தனர்.
முர்மு பாஜக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களை இங்குள்ள உணவக விடுதியில் சந்திப்பார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப் பேரவையில் பாஜகவுக்கு 71 எம்எல்ஏக்கள் உள்ளனர். இக்கட்சிக்கு மாநிலத்திலிருந்து 24 மக்களவை உறுப்பினர்களும், 4 மாநிலங்களவை உறுப்பினர்களும் உள்ளனர்.
திங்களன்று, எதிர்க்கட்சிகளின் அதிபர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார். draupati murmu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.