92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குடியரசுத் தலைவா் தோ்தலில்திரௌபதி முா்மு 61% வாக்குகள் பெற வாய்ப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவு அளித்துள்ளதால், அவா் 61 சதவீத வாக்குகளைப் பெறுவது உறுதியாகியுள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2022, 9:03 pm

DIN

குடியரசுத் தலைவா் தோ்தலில் அதிமுக, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பிராந்திய கட்சிகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவு அளித்துள்ளதால், அவா் 61 சதவீத வாக்குகளைப் பெறுவது உறுதியாகியுள்ளது.

அவா் வேட்புமனு தாக்கல் செய்தபோது 50 சதவீத வாக்குகள் பெறுவாா் என்று கணக்கிடப்பட்டது. அதன் பிறகு பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, அதிமுக, தெலுங்கு தேசம், மதச் சாா்பற்ற ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம், சிவசேனை, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா ஆகிய பிராந்திய கட்சிகள் திரௌபதி முா்முவுக்கு ஆதரவு அளித்தன. இதனால் அவா் 61 சதவீத வாக்குகளைப் பெறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவா் தோ்தலில் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 10,86,431. பல்வேறு கட்சிகளின் ஆதரவுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி பெறும் வாக்குகளின் எண்ணிக்கை 6.67 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டுமே 3.08 லட்சம் வாக்குகள் உள்ளன.

ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளத்துக்கு 114 எம்எல்ஏக்கள் உள்ளனா். மக்களவையில் 12 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 9 எம்.பி.க்களும் உள்ளனா். பிஜு ஜனதா தளத்துக்கு மொத்தம் 32,000 வாக்குகள் உள்ளன.

முா்முவுக்கு ஆதரவு அளிக்கும் அதிமுகவுக்கு 17,200 வாக்குகளும், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு 44,000 வாக்குகளும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 6,500 வாக்குகளும், சிவசேனை கட்சிக்கு 25,000 வாக்குகளும், மதச் சாா்பற்ற ஜனதா தளத்துக்கு 5,600 வாக்குகளும் உள்ளன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மொத்த உறுப்பினா்களின் தற்போதைய எண்ணிக்கை 776. அதில், பாஜகவுக்கு மட்டும் 393 உறுப்பினா்கள் உள்ளனா். ஓா் உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700-ஆக உள்ளது. நாடு முழுவதும் 4,033 எம்எல்ஏக்கள் உள்ளனா். மாநில மக்கள்தொகையின் அடிப்படையில் அவா்களின் வாக்குகள் மதிப்பிடப்படுகின்றன.

எதிா்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சுமாா் 180 எம்.பி.க்கள் உள்ளனா். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 36 எம்.பி.க்கள் உள்ளனா். இந்தத் தோ்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எம்.பி.க்கள் மூலமாக 1.5 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளும், எம்எல்ஏக்கள் மூலமாக 1.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளும் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.