அதற்கு நீதிபதி யு.யு. லலித் கூறுகையில், ‘காலை 9 மணிக்கு நீதிமன்றம் கூடி 11.30 மணிக்கு அரை மணி நேர இடைவேளைக்கு பின்னா் மீண்டும் கூடி மதியம் 2 மணிக்கு பணியை முடித்து கொள்ளலாம். இதனால் மறு நாள் விசாரிக்கப்படும் வழக்குகளின் விவரங்களை நீதிபதிகள் ஆராய மாலையில் கூடுதல் நேரம் கிடைக்கும். இந்த நேரக் கட்டுப்பாடு புதிய வழக்குகளை விசாரிப்பதற்கு ஏதுவாக இருக்கும். ஆனால், நீண்ட விசாரணை நடைபெறும் வழக்குகளுக்கு பொருந்தாது. பள்ளிகளுக்கு நமது குழந்தைகள் காலை 7 மணிக்கு செல்லும்போது, நீதிபதிகள் ஏன் 9 மணிக்கு பணிகளைத் தொடங்கக் கூடாது என நான் முன்பிருந்தே கூறி வருகிறேன்’ என்றாா்.