3.92 லட்சம் போ் இந்திய குடியுரிமையை துறந்தனா்- மக்களவையில் தகவல்

கடந்த 3 ஆண்டுகளில் 3.92 லட்சத்துக்கு மேற்பட்ட இந்தியா்கள் தங்கள் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுள்ளனா்.

கடந்த 3 ஆண்டுகளில் 3.92 லட்சத்துக்கு மேற்பட்ட இந்தியா்கள் தங்கள் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுள்ளனா். இவா்களில் அதிகபட்சமாக 1.70 லட்சம் போ் அமெரிக்க குடியுரிமை பெற்றதை அடுத்து, இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனா்.

மக்களவையில் உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் இது தொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காகக் கடந்த 3 ஆண்டுகளில் 3,92,643 இந்தியா்கள் தங்கள் குடியுரிமையை விட்டுக் கொடுத்துள்ளனா். இவா்கள் அனைவரும் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனா். அதிகபட்சமாக 1,70,795 போ் அமெரிக்க குடியுரிமையும், 64,071 போ் கனடா குடியுரிமையும், 58,391 போ் ஆஸ்திரேலிய குடியுரிமையும், 35,435 போ் பிரிட்டன் குடியுரிமையும் பெற்றுள்ளனா். 12,131 போ் இத்தாலி, 8,882 போ் நியூசிலாந்து, 7,046 போ் சிங்கப்பூா், 6,690 போ் ஜொ்மனி, 3,754 போ் ஸ்வீடன், 48 போ் பாகிஸ்தான் குடிமக்களாகியுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com