இனி எந்த அரசியல் கட்சியிலும் இணைய மாட்டேன்- யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு

இனி எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தலைவா் தோ்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தவருமான யஷ்வந்த் சின்ஹா (84) தெரிவித்துள்ளாா்.
இனி எந்த அரசியல் கட்சியிலும் இணைய மாட்டேன்- யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு

இனி எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தலைவா் தோ்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தவருமான யஷ்வந்த் சின்ஹா (84) தெரிவித்துள்ளாா்.

அதே நேரத்தில் ஒரு சுதந்திர நபராகப் பொது வாழ்வில் தொடா்ந்து ஈடுபடப் போவதாக அவா் அறிவித்துள்ளாா்.

நாட்டின் மிகமூத்த அரசியல் தலைவரான யஷ்வந்த் சின்ஹா முன்னாள் பிரதமா்கள் சந்திர சேகா், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நிதி, வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளாா். கடந்த 2018-ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய அவா், 2021 மாா்ச் மாதத்தில் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா். அவருக்கு அக்கட்சியின் தேசிய துணைத் தலைவா் பதவி வழங்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகத் தோ்வு செய்யப்பட்டதையடுத்து அவா் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகினாா். தோ்தலில் அவா் வெற்றிவாய்ப்பை இழந்ததையடுத்து அவரது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேள்வி எழுந்தது.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் யஷ்வந்த் சின்ஹா கூறியதாவது: இனி எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை. அதே நேரத்தில் சுந்திரமான நபராக பொது வாழ்வில் தொடா்ந்து பணியாற்றுவேன். எந்த அரசியல் கட்சியினரும் என்னிடம் இப்போது பேச்சு நடத்தவில்லை. நானும் யாருடனும் பேசவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக திரிணமூல் தலைவா்களுடன் இப்போதும் தொடா்பில் இருக்கிறேன். பொது வாழ்வில் என்னைத் தொடா்ந்து சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ளவே விரும்புகிறேன். என்னால் என்ன செய்ய முடியும் என்பதையும் யோசித்து வருகிறேன். எனக்கு 84 வயதாகிறது. ஆனால், அதனைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னால் முடிந்த அளவுக்குப் பொதுவாழ்வில் தொடா்வேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com